பிரம்மனே
பிரம்மனே .......
**********************************
அஞ்சுதலை நீகொள்ள அதுகண்ட
அங்கண்ணன் அதிலொன்றை கொய்திடவே
அஞ்சியே அயன்நீயும் மிஞ்சுதலை
காத்துவிட தவநிலை ஏற்றவனே- உன்
கெஞ்சுதல் அவனேர்க்க உனக்கிட்ட
கட்டளை ஒன்றல்ல அதன்மேலோ ? - என்
நெஞ்சுற்ற ஓரஞ்சை உகமாய்
உரைத்தேனே பின்வரும் வரிசைலே !
1. தஞ்சமென வந்தோரின் தலையெழுத்தை மாற்றிவிடு
2. பஞ்சமென வருவோர்க்கு பந்தியிட்டு பரிமாறு
3. துஞ்சிஎழும் காலையிலே கவலையற்ற நிலைகொடு .
4. மஞ்சம்நேர காத்தவர்க்கு மன்றல் கூட கருனையிடு
5. நஞ்சு ஒத்த தொல்லைகள் அருத்தகற்றி காப்பாற்று .
இந்தஞ்சை உளமேற்றி உதவிடு உலகோர்க்கு கஞ்சனாய் இல்லாது தார்மீக செயலாற்று
.