இறக்கை கேட்டேன்

இறக்கை ஒன்று கேட்டேன்
கல்லை கொடுத்து பூமி என்றான்
தடை இல்லா கனி கேட்டேன்
விதையில் உயிரை வைத்தான்
சட்டை இல்லா உடம்பு கேட்டேன்
சாட்டையில் அடித்துக்கொள்ளும் கூத்து பார்த்தேன்
வேலை இல்லா வாழ்க்கை கேட்டேன்
வேலையில் மதிப்பை வைத்தான்
கூலி இல்லா மாதம் கேட்டேன்
கூலியில் கேலியை வைத்தான்
பசி இல்லா வயிற்ரை கேட்டேன்
பிச்சையில் வயிற்ரை நிறைத்தான்
உச்சி சாயா சூரியன் கேட்டேன்
புத்தி மாற பானம் விற்றான்
கல்வி கொண்ட பார்வை
தொழிலில் கண்ட வியர்வை
திசை மாற்றலாம்
ஒரு வாதம் ஏற்படலாம்
தீவிரம் அடையலாம்
தீராமல் தீவிரவாதம் ஆகலாம்
உண்ணா விரதம் இங்கு
சும்மா நேரும்
முன்னாள் காணும் ஒன்று
மூடி வைக்கப்படும்
பிரச்சனை தீராது
அர்ச்சனை ஓயாது
கர்ஜனை செய்யாதே இலைஞா
நீ
பிழைக்க வந்தாய்
கலையை கலைக்க வரவில்லை
எப்போது முத்திய கீரைகள்
சபைக்கு வராதோ
அப்போது முந்தைய கரைகள்
கணக்குக்கு வராது
யோசித்தால்
முத்தியது எல்லாம்
உணவை கேடு செய்யவில்லை
சில புதிய உணவும்
வேதத்தை நிலைக்க வைத்தது
கண்டால்
பூமி மக்கள் தொகையினால்
பாரமானதோ?
இல்லை ஜனங்கள் ஒற்றுமையின்மையால்
பாரமானதோ?
காத்திரு இலைஞா
உன் நேரம் வரும்
புதிய உலகம் படைக்க
-மனக்கவிஞன்