கருக் கலைப்பைத் தவிர்ப்போம்

ஒரு நல்ல இதயத்துடிப்பு
நிறுத்தப்படுகிறது;

இரண்டு கண்கள் நல்லவைகளைப்
பார்க்க முடியாமல் போகிறது;

இரண்டு கரங்கள்
நல்ல குடும்பத்தையும்,
குழந்தைகளையும், சந்ததியையும்
அரவணைக்க முடியாமல் துடிக்கிறது;

இரண்டு கால்கள்
வாழ்க்கை என்ற ஓட்டத்தில்
ஓடும் வாய்ப்பை இழக்கிறது;

ஒரு வாய்
தாய்மையை, உண்மையை,
நல்லவைகளைப் பேசும்
திறனை இழக்கிறது;

அனைத்து இழப்புகளையும் தவிர்க்க,
எல்லா வளங்களையும் பெற்றிட
பெண்மையைப் போற்றுவோம்;

கருக் கலைப்பைத் தவிர்ப்போம்;
பெண் சிசுக் கொலையைத் தடுப்போம்.

கருக் கலைப்பைத் தவிர்ப்போம்

ஒருநல் லிதயத் துடிப்புமே நிறுத்தப் பட்டு,
இரண்டு கண்கள் நல்லவை பார்க்கா மலேபோய்,
இரண்டு கரங்கள் நல்ல குடும்பத் தையும்,
அரவணைக் கமுடியா மல்வருந் திதுடிக் கிறதே! 1

இரண்டு கரங்கள் நல்ல குடும்பத் தையும்,
வரமாய் குழந்தை, சந்ததி யையும் காணாமல்,
இரண்டு கால்கள் வாழ்க்கை என்ற ஓட்டத்தில்
ஓடும் வாய்ப்பை உதறி இழந்து தவிக்கிறது! 2

ஒருவாய் தாய்மை, உண்மை, நல்லவை பேசும்
திறனை இழக்கும்; அனைத்து இழப்பைத் தவிர்க்க,
எல்லா வளங்களைப் பெற்றிட பெண்மை யையும்
வல்லமை யுள்ள குழந்தைச் செல்வம் போற்றுவோம்! 3

ஒருமித்த உணர்வில் மக்களும், மருத்துவரும் என்றும்
கருக்கலைப் பையினி கட்டாயம் நாமே தவிர்ப்போம்;
மண்ணில் வளங்கள் பெருக மாந்தரெல்லாம் என்னாளும்
பெண்சிசுக் கொலையைத் ஒன்று கூடித் தடுப்போம்! 4

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Sep-15, 3:06 pm)
பார்வை : 73

மேலே