ஏட்டுச்சுரைக்காய்
குழந்தைகளின்
பாடப் புத்தகங்களில்
படங்கள் எவ்வளவு அழகாகவும்,
மனதுக்கு இதமாகவும்
இருந்தது..
ஊதா வானத்தில்..
வானவூர்தி
பறந்து கொண்டிருந்தது
கீழே பசுமையான புல்தரையில்
மானும் மயிலும்
மேய்ந்துகொண்டிருந்தது..
பல விதப்பறவைகள்
பறந்த வண்ணம் இருந்தது
மரங்களும் வீடுகளும்..
வரிசையாக இருந்தது
வீட்டின் அருகே..
குல்லா அணிந்த சிறுவனும்..
பட்டை போட்ட பொடியனும்..
வெள்ளை நிற பந்து..
விளையாடிக்கொண்டு..
இருந்தார்கள்..
எவ்வளவு அழகாக இருந்தது
குழந்தைகளுக்கான..
பாடப்புத்தகம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
