இவர் வாழ்வு சிறக்க என் செய்தாய்

உணவுக்காய் இரவு பகலாய்
அலையும் ஜீவராசிகள் போல
இம் மண் வாழ் மனித ஜீவன்கள்
அலைவது கொடுமை!!

புகழுக்காய் பூண்ட வேடத்துக்காய்!
தலை நிமிர்நதே வாழும் மானிடன்
ஏன் தலை குணியவில்லை
தாழ்ந்திட்ட இவ்வினத்துக்காய்!!

பொன்னும் பொருளும் சேர்ப்பதற்காய்
பொய்யும் புரட்டும் தாராளம்!
உணவுக்காய் தாளம் போடும் இவனுக்காய்
ஏது செய்தாய் இவர் வயிரார!

வெண்மைக்குள் புகுந்து
உன் மனக் கருமை மறைக்கின்றாய்!
ஏன் இவர் கருமை நீக்கி
உன்னுளக் கருமை நீக்கவில்லை!!

பேச்சிலே கொடுப்பதில் வள்ளல் நீ!
செயலிலோ சிறுமையின் சொந்தக்காரன்!
நீ தருவாய் என வாய் பார்க்க விட்டு
தந்திரமாய் தலை மறைந்தாய்!!

ஒன்றை மட்டும் நீ மறந்தாய்!
ஏற்றமும் இறக்கமும் இயற்கை
உன்செல்வம் ஓர் நாள் உரங்கிட்டால்
இவர் நிலைதான் உன்னிலையும்

எழுதியவர் : ஜவ்ஹர் (3-Sep-15, 8:04 am)
பார்வை : 107

மேலே