கடவுளால் கைவிடப்பட்டவன்

எந்த மரணத்துக்கஞ்சி
உயிரைப் பிடித்து
ஓடிக் கொண்டிருந்தானோ
அந்த மரணத்தின் விரல்கள்
இறுதியாகஇவனைத்
தீண்டிவிட்டது..
உலகத்துப் பெரிய மனிதர்களே
இவன் உடலை
வெறுமனே பார்த்துவிட்டுக்
கடந்து செல்லாது
கூடவே குளிர்ந்த
நிழல்களை
அவன் மீது நிறைத்துச்
செல்லுங்கள்.
சுட்டெரிக்கும் சூரியனின்
கீழ் மூச்சுத் திணறியபடி
பொறுத்தலுக்கு அப்பாற்பட்டு
பிணக் குவியல்களுள்
புழுங்கிக் கொண்டிருக்கும்
உயிர்களுக்கு சுவாசிக்க
காற்றாவது இனிக் கிடைக்கட்டும்...

எழுதியவர் : உமை (3-Sep-15, 10:35 am)
பார்வை : 459

சிறந்த கவிதைகள்

மேலே