பேசும் பெண்மை

கருவினில் கருணை உருக்கொண்டு ஈரைந்து மாத
காலம் கண்மூடி கடும்தவம் செய்தே
பிறந்தாய் பெண்ணாய் பெரும்தவம் செய்தாயோ இப் பூவுலகில்
பரிணமித்திட
பாசறை கொண்டாயோ கண்ணே எந்தன் மனதினிலே
குழந்தை பருவமதில் குறும்புகள் செய்தே
குழவியாய் என் மனதில் மாறா இடமதனை
நீயும் நிலைத்தாயோ
பிள்ளையாய் பல பிழைகள் செய்த போதிலும்
பள்ளிபருவமத்தில் பலவிருதுகளை பெற்றே என் மனமதில்
ஏனோ அழியா இடமதனை பெற்றாயே
பருவமடைந்ததும் முடங்கிடாது முடித்தாயே உன்
கல்வி பயணமதை
பல்கலைகழகம் சென்றே பட்டதாரியும் ஆனாயே
எனேக்கே உரியதாம் அதனையும் கல்யாணம்
செய்தபின் பெற்றே என் நிலையதனை பூர்த்தி செய்தே
பெண்ணே நானே உன் பெண்மை
எனையே புதிதாய் கண்டன் அந்த பாரதியும்
என்னையே மதித்தே போற்றுமோ இவ்வுலேகே பாரதி கண்ட புதுமை
பெண்ணாய்