உடன் வாழ, உயிர் வாழ
இறுக்கமாய் கட்டிக்கொள்,
இணைவதில் மட்டுமே பலம்..
உறுதி என்பது உள்ளுக்குள்
தனித்திருந்தால் வாராது..
சமமற்ற வலுவுற்ற நாம் கூடி
இருந்தால் மட்டுமே நம் வலு பயன் தரும்.
கூடி இருந்தால் கோடி இன்பம்
கூடு பிரிந்து சென்றால் ஏது இன்பம்..
தனித்திருத்தல் தன்னிலை விளக்கும்
தனக்குள் தானே விருத்தம் கூட்டும்
தனித்திருத்தல் தற்பெருமை தரவே,
அது வசந்தமெனினும் யாது ரசிக்க? எத்துணை ருசிக்க?
வாழ்வில் பகிரும் இன்பம் உன்மழைநாளில் உனக்கு உதவும்..
உனக்கு நான் எனக்கு நீ, நமக்கு நாம் இருப்போம் சிறப்போம்.
கூட்டுக்குள் மட்டுமே இடறினாலும் இன்பம்
எப்படி இருந்தாலும் இனிக்கும் அந்த இன்பம்..
இன்பம் வெளிச்சம் இருட்டு துன்பம்
வெளிச்சத்தில் மட்டுமே விலகும் இருட்டு..
இருட்டு வெளிச்சத்தை ஏதும் செய்யா..
கூட்டு இன்பம் கூடுதல் இன்பம்
கூடுங்கள்
கூடு ஒன்றே!