அட்வைஸ்

கல்லூரிப் பேராசிரியைக்குரிய தோரணை, அதே நேரம் பரிவு; இவற்றுடன் தன் பழைய மாணவி ரேகாவைப் பார்த்ததும் மணிமேகலை மூன்று கேள்விகளைக் கேட்டாள்.

"என்னம்மா உன் ஆபீஸ் வேலைகள் எப்படி இருக்கு?'

"உன் மாதச் சம்பளம் எவ்வளவு?'

"இதுவரை எவ்வளவு பணம் உன் சேமிப்புக் கணக்கில் இருக்கு?' ரேகாவும் புன்னகையுடன் மூன்று கேள்களுக்கும் பதில் சொன்னாள்...

"ரொம்பவும் நல்லா போய்கி"டடு இருக்கு மேடம்! கூட வேலை செய்யறவங்க ரொம்பவும் உதவியா இருக்காங்க!'

"மாதம் பதினேழு ஆயிரம் ரூபாய் சம்பளம். சிக்கனமாக செலவு பண்ணி இதுவரை இருபதாயிரம் சேமிப்பில் இருக்கு மேடம். என் அப்பாவுக்கும் தெரியும். "உன் திருமணத்திற்கு அதுவே முதலீடாக இருக்கட்டும்' என்று சொன்னார் அவர்.'

வெரிகுட். உனக்கு ஒரு அட்வைஸ், உன் நலனில் எப்பவும் எனக்கு அக்கறை உண்டு என்ற உரிமையில்...

சொல்லுங்க மேடம்...

இதுவரை சேர்த்த சேமிப்பையும் இனி சேர்க்க விருப்பதையும் உன் அப்பாவுக்கே அனுப்பிவை. அவரே ஊரில் சேமிப்புக் கணக்கில் போடட்டும். பணம் சேரச் சேர "ஆஹா! போதிய பணம் சேர ஆரம்பிச்சிருச்சே! பொண்ணுக்கு வரம் தேட வேண்டிய வேலை வந்தாச்சோ? என்ற எண்ணம் உன் அப்பா மனசில் தோன்றும். உடனே, வரன் தேட ஆரம்பிப்பார். ஏனென்றால் இந்தக் காலத்தில் பொண்ணுக்கு பையனோ பையனுக்கு பெண்ணோ அமையுறது அவ்வளவு ஈஸி இல்லையே, அதான்' என்று சொன்ன மணிமேகலையை நன்றியுடன் பார்க்கலானாள் ரேகா...

எழுதியவர் : சரஸ்வதி பஞ்சு (3-Sep-15, 2:46 pm)
சேர்த்தது : Abitha
பார்வை : 231

மேலே