என்னோடு உடன் பிறவா தமிழன் - போட்டி கவிதை

------ என்னோடு உடன் பிறவா தமிழன்
------ வறுமையை வரிந்துக்கட்டிக்கொண்டு
------ வருவான் காற்றையும் அலையும் தாண்டி
------ நீரில் வலை வீசும் முன்பே
------ நீவிர் வீசும் வலையில் விழுவான்
------ அடிபட்டு உதைப்பட்டு வதைபட்டு
------ உன் கூட்டில் அடைபட்டு கிடப்பான்
------ சிறகு யிழந்த பறவையாய் உணர்விழந்து
------ நாடு மறந்து வீடு மறந்து உன்னால்
------ உணவு மடுத்து அடிமையானான்
------ மடைகள் திறந்த நதிகளாய்
------ அத்துமீறி குவித்தாயே இராணுவம்
------ அதனின் பேச்சிலும் செயலிலும் ஆணவம்
------ என் தமிழனின் குருதியில் குளிக்கும்
------ அவன் சதை துளைத்த தோட்டா
------ உயிர் வேண்டி உன்னிரு காலடியில்
------ தலை தாழ மாட்டான் தமிழன்
------ உயிரையும் துச்சமாகவே எண்ணிடுவான்
------ அக்கரம காரனே மிதவை
------ மிதப்பதாய் சொல்கிறாய்
------ அறிவு கேட்டவனே அதை
------ காற்றிடம் சொல்லிவை
------ அடித்து செல்லாமல் இருக்கட்டும்
------ ஆழியில் ஏதடா எல்லை ஆயினும்
------ செய்வது ஏனடா தொல்லை....





குறிப்பு:- தடாக கலை இலக்கிய வட்டம் சர்வதேச அமைப்பின் கவிதை போட்டிக்காக எழுதி சமர்ப்பித்த
கவிதை.

செ. பாரதி (பாரதி செல்வராஜ் )
கும்பகோணம்

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (3-Sep-15, 9:49 pm)
பார்வை : 322

மேலே