அழுகை
ஒலியின்
தண்டுவடத்தில்
உயிர்சொருகி
செவிப்பறையில்
மின்சாரத்துமி
சேர்த்தவளே!!
இட மார்பில்
தலை சாய்த்து
வல மார்பில்
நக கிறுக்கலால்
ஆண்மை
கிழித்தவளே!
திரையிட்ட
பாகமெங்கு
தீ பொதித்து
தீண்டிய
பொழுதெங்கும்
நொதித்த தேன்
சிந்திய இராட்சசியே!!
பிடிச்சோற்றில்
விரலிடுக்கால்
பிதுங்கிவழிந்து
புறங்கையில்
குடிகொண்ட
குழம்பு அருந்தி
பசியாற செய்தவளே!!
யவ்வனம்
திரட்டி
யாதுமாகி
ஹார்மோனில்
புகுத்தி
'கடைசிவரை
நீ வேண்டுமடா'
சிறுதுளி விழிநீரில்
அறிக்கை சமர்பித்தவளே!!
மரணத்தின்
மையம்தொடும்
பிரசவத்தில்
உன் உயிர்
போகுமெனில்!!
நமக்கேன் குழந்தை??
மலடி என்பது
அடுத்தவன்
அடிவயிற்றில்
உண்டாகும்
ஒலியில்தானே
சொல்லாகிறது!
எனக்குள்ளும்
அல்லவே!
நான் குறும்பின்
குழந்தை!
நீ அன்பின்
குழந்தை!
பிரசவ அறையில்
நிறைமாத
கர்பினியின்
கைபற்றியளும்
கணவன் கூட!!!
தாதியருக்கு
குழந்தையாகவே
தெரிகிறான்.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
