தேடல்

சிந்திக்கிறேன்....
சிந்திக்கிறேன்....
எப்படி உன்னை சந்திப்பது.... சிந்திக்கிறேன்....
இடைவிடாமல் பேசியிருந்தோம்.... எப்படி விழுந்தது இடைவெளி..... சிந்திக்கிறேன்.... சண்டைகள் எல்லாம் போட்டிருந்தும்..... சமாதானம் செய்தது யார்..... சிந்திக்கிறேன்.... செல்லமாய் அழைத்தது எல்லாம் சொல்லாமல் செல்ல தான...... சிந்திக்கிறேன்....
கண்ணீரை தந்துவிட்டாய்.....
கவலைகளை நிரப்பிவிட்டாய்....
ஆசைகளை தூண்டி விட்டாய்.....
ஆபத்தையும் அருகில் வைத்தாய்.....
ஊமை போல் அமர வைத்தாய்.... எதையும் உணர தெரியாத குழந்தைப் போல தவிக்க விட்டாய்.... சிந்திக்கிறேன்.... சிந்திக்கிறேன்..... ஏன் என்று புரியாமல் நானும்..... எப்படி உன்னை சந்திப்பது....
என்றே சிந்திக்கிறேன்..... மறந்த உன்னை மறக்க தெரியாமல்.....

தேடும் என் விழிகளின் தேடல் என்னோடு மட்டும் முடிந்துவிடுமோ

சி ந் தி க் கி றே ன்...
























!...உன்னோடு நான் உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (3-Sep-15, 10:28 pm)
Tanglish : thedal
பார்வை : 102

மேலே