கவிதையும் காதலும் - 5

கவிதை வாஸ்து பார்த்து
கட்டப்படும் காதல் அழகிய வாசஸ்தலம்..

காதல் கொடி ஏற்றும் போது
கவிதை பார்வையில் பண்ணிசைக்கும்,
தினம் தினம் மெட்டிசைத்து பாட்டிசைக்கும்
கவிதைகள் கடிதங்களில் கண் சிமிட்டும்.

"காதல் பேருந்தில் நம் வாழ்க்கைப்பயணம்;
ஓட்டுனர் நீ, நடத்துனர் நான்,
என் இசைவில் மட்டும் தான் உன் அசைவு",
- கவிதை காண்டீபத்தில் காதல் சுயம்வரம்.

தினசரி வாழ்வினில் தினுசு தினுசு தானே பிரச்சினைகள்;
தேகம் தேடும் பார்வை பதிவுகளில் மோதும்
மற்ற முகங்களில் சில முட்களும் இருக்குமே.

காதல் கனிவு தர கவிதை பனிப்பொழிவு தரும்
காதல் பேதமையில் கவிபோதை கூட்டும்.
விடிந்தால் காதல் மலரும் விடிவெள்ளியாய் கவிதை முளைக்கும்
உணர்ந்தெழும் காதல் உளறித்தவிக்கும் கவிதை

வாழ்க்கை பற்றி எளும் பேச்சில் தனிக்கவனம்.
அடுத்தவர் நலனில் புதியதாய் வரும் பொதுநலம்.
சுயநலம் கற்றுக்கொள்ளும் மெலிதாய் புதுப்பாடம்.

"வாழ்க்கைபோரில் அர்ச்சுனனாய் நான் கிருஷ்ணனாய் நீ
கேட்டுக்கொள் காதல் தான் இனி நமக்கு கீதை".

காதல் இனிக்கும் கண்கள் பணிக்கும்
கவிதை மணக்கும் ஹாஷ்யம் நிறையும்

"வில்லாய் நான் கணையாய் நீ,
வீடு செல்ல வேண்டிய நீ ஏன்
விடை பெற முடியாமல் தவிக்கிறாய்".
- கேள்விக்கண் ஒன்று கேட்காது இன்னொன்று.

காதலில் வறுமையின் நிறம் சிவப்பு.
- (காணாது தவிக்கையில் கண்கள் சிவந்திடுமே)
கவிதையில் வறுமையின் நிறம் எழுத்து.
- (சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்)

(தொடரும்)

எழுதியவர் : செல்வமணி (5-Sep-15, 1:54 am)
பார்வை : 156

மேலே