ஆசரியர் தினம்

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர் . குடும்ப சூழ்நிலையால் அவரது தந்தை பள்ளிக்கு அவரை அனுப்ப விருப்பம் இல்லாமல் வேதம் கற்று கொள்ள கூறினார். வருமானம் குறைவு பெரிய குடும்பம் என்பதால் அவரால் எதுவும் மறுத்து பேச முடியவில்லை அவரின் தந்தையிடம் . ஆனால் எப்படியோ அருகில் உள்ள ஒரு சிறிய பள்ளியில் சேர்ந்தார்.

மிகவும் புத்திசாலியான மாணவன் . scholarship பெற்று 17 வயதில் கிறிஸ்துவ கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். இடையூறுகள் பல சந்தித்தார் . 17 ருபாய் மாத வருமானத்தில் ஆசிரியராய் சேர்ந்தார். கடின உழைப்பு , தனித்துவம் வாய்ந்த கற்று கொடுக்கும் திறன் இவரது பெருமையை கூட்டின.

தலை சிறந்த பாரத ரத்னா விருது பெற்றவர்
40 வயதில் ஆந்திரா பல்கலைகழகத்தில் vice chancellor ஆக பணியாற்றினார் .

செப்டம்பர் 5 இவரது பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாட பட்டு வருகின்றது

டாக்டர் ராதாகிருஷ்ணன் அய்யாவை மனதில் நிறுத்தி கற்பதில் விருப்பம் காண்பித்து களிப்புடன் உயர முயற்சி செய்வோம்


நாளைய சமுதாயத்தை உருவாக்கும் அனைத்து
ஆசிரியர்களுக்கும் எதிர் காலம் சிறப்பாய் அமைய அவர்களின் தொண்டிற்காக
வாழ்த்துவோம் .....


ஓவியம் கிருபகணேஷ் .

எழுதியவர் : கிருபா கணேஷ் (5-Sep-15, 8:51 am)
சேர்த்தது : kirupa ganesh
பார்வை : 548

சிறந்த கட்டுரைகள்

மேலே