இனிய காலை வேளை
இது ஒரு மறு பதிவு ................................. ...
==============================================================
வேலைக்கும் செல்லும்
ஒரு பெண்மணியின் இல்லத்தின் இனிய காலை வேளை...
கௌசல்யா
சுப்ரஜா
ராமபூர்வா ...
அலாரம் அமைதியாய்
அடித்தாலும்
அலறி அடித்து
அவசர அவசரமாய் எழுகை ....
அலாரம் அணைக்கப் பட்டாலும்
ஆம்புலன்ஸ் போன்று
அபாய ஒலியை எழுப்பி கொண்டே
அங்கும் இங்கும் ஓட்டம் ...
வாசலில் கோலமிட்டு
வர லக்ஷ்மியை உள்ளே அழைத்து
பால் கவரை
பாங்காய் எடுக்க சென்றது தான் தாமதம் ..
பூனையின் பரம பத விளையாட்டில்
பால் பாம்பு போல் கீழே இறங்கி
அருவி போல் ஓட்டம் ...
பாலின் கண்ணீரை
கண்ணீர் விட்டு கொண்டே துடைத்து
எழுந்தது தான் தாமதம் ..
இடுப்பில் சுரீன்ற வலி ..
வலியை விழுங்க
காபியை விழுங்கி
சமையல் எனும் போர் களத்தில்
வீராங்கனையாய் இறங்க போகும் நேரத்தில்
அலை பேசியில்
அன்பாய் அழைப்பு ...
இயற்கையான அழைப்பை
செயற்கையாய் ஏற்று
காதில் வைத்த போது
கணீரென்று
கண்ணமாவின் குரல்
வேலைக்கு விடுப்பு சொல்லி ....
பத்து பாத்திரம்
பத்ரகாளியாய் ரூபம் எடுக்க
குளியலறையிலிருந்து
குய்யோ முய்யோ என சத்தம்..
குளியலறையின் குழாய் உடைந்ததால்
குளம் போல் தண்ணீர் வீடு முழுவதும் ..
எது நடந்ததோ அது
நன்றாகவே நடந்தது
எது நடக்க இருக்கின்றதோ
அதுவும் நன்றாகவே நடக்கும் என
செய்தித்தாளில்
சலனமற்று
புதைந்த கணவரை
நெற்றி கண்ணை திறந்து
நெருப்பை வீச நினைத்து ..
நெருப்பை வீசினால்
தீயணைப்பு அலுவலகத்திற்கும் நான் தான்
செல்ல வேண்டும் என்று
தண்ணீர் விட்டு அணைத்து
இன்னல்களை
இரும்பான மன வலிமையோடு சந்தித்து
சமையலை சிம்பிளாய் முடிக்க எண்ணி
சரக் சரக் என் காய்கறிகளை வெட்டும் போது
காய்கள் தன்னை மதிக்கதாதாக எண்ணி
கோபத்தை காட்ட
கைகளில் இரத்தம் பெருக்கெடுக்க ..
மரத்து போன உணர்வுகளால்
வலிகளை மறந்து
மகளை பள்ளிக்கு புன்னகையுடன்
விடை கொடுத்து திரும்பும் போது
மற்றுமொரு சத்தம்
மகளிடமிருந்து
புத்தக பையை விட்டு விட்டு போனதாக
புதிய வார்ப்புகள் பாடலான
வான் மேகங்களே .........
வாழ்த்துங்கள் வாழுங்கள் என்று
பாடி கொண்டே புத்தக பையை கொடுத்து விட்டு
பள்ளி வாகனம் பறந்ததை பார்த்து விட்டு
அலுவலகம் செல்ல
உடை மாற்றி
உணர்வுகளை மாற்றி
உணவு உண்டதாக நினைத்து
உள் மூச்சு பயிற்சி எடுத்து
உவகையுடன் இந்த நிமிடம் தான்
இந்த இனிய காலையின் கடைசி நிமிட ஓட்டம் என
எண்ணி இறங்கும் போது டாமல் என்ற சத்தம்....
என்னவென்று திரும்புகையில்
தண்ணீர் வழுக்கி
கீழே விழுந்தேன்
எழ நினைத்த போது
"why this kola veri kola veri
kola veri di என்ற பாடல் ரேடியோவில்

