அவமானங்களை ஏற்றுக்கொள்

நீ படும் அவமானங்கள்
வெற்றிக்கான விதையை
வீறுகொண்டு எழச்செய்யும்
முதலில் அவமானங்களை
அன்போடு ஏற்றுக்கொள்
அவற்றை பண்புகொண்டு
பிரித்துவை
அவமானங்கள் உனக்கு அடிமையாகும்
என்று தெரியுமா?
வெற்றி விதையாக இல்லாமல்
மரமாக மாறும்போது
ஆள்காட்டி விரல்கள் கொடுத்த
வேதனைகள் அனைத்தும்
ஐயிரண்டு விரல்களும்
தன்னிலை மறந்து உனக்காக
தாளமிடும் போது மறையும்

எழுதியவர் : -இது என் குழந்தை (5-Sep-15, 12:57 pm)
பார்வை : 375

மேலே