கடிவாளம்

ஐயிரண்டு திங்களில் பக்குவமாய்
ஈன்றெடுத்தால் என் தாய்
என் தலை வெளிச்சம் காணும் வரை
வேதனைகளை உள்ளடக்கி
பதறிக்கொண்டிருந்தான் என் தந்தை
நான் இவ்வுலகை கண்ட நாள் முதல்
வறுமை நிலை வராமல் தவிர்க்க
இன்னல்களை அவன்
முதுகில் ஏற்றிக்கொண்டான்
என் பாதங்களால்
அவன் நெஞ்சம்
உதைபடுவதை விரும்பியவன்
ஆளான குதிரையானாலும்
என் தந்தையின்
கெளரவங்கள் இன்னும்
கடிவாளமாய்தான் இருக்கின்றன

எழுதியவர் : -இது என் குழந்தை (5-Sep-15, 12:59 pm)
Tanglish : kadivalam
பார்வை : 182

மேலே