ஆசிரியர்கள்

அகிலமெல்லாம் அன்பை பரப்பி,
ஆழ்கடல் அமைதியை கொண்டு,
இயற்கை எனும் இன்பம் கலந்த,
ஈர காற்றின் இனிமை தானே!!

உள்ளமெல்லம் பன்மொழி பேசி,
ஊக்கமெனும் உணர்வை ஊட்டி,
எண்ணங்களை எழுச்சி பெறசெய்யும்,
ஏட்டுகல்வியின் தந்தை தானே!!

ஐயமெல்லாம் அகன்று போக,
ஒன்றேசாதி நெறிமுறை தந்து,
ஓதும் உங்கள் வார்த்தையெல்லாம்
ஔவைமொழியின் வேதம் தானே!!

எழுதியவர் : Raja (5-Sep-15, 1:20 pm)
பார்வை : 387

மேலே