விண்டோஸ்

உலகத்தை காண
கதவுகளை திறந்தான் அன்று,
விண்டோஸ் திறந்தான் இன்று...

சுதந்திரம் உண்டு, பணமும் வேண்டாம்
கதவுகளை திறக்க,
அவனுக்கு சுதந்திரம், நமக்கு பணம் வேண்டும்
விண்டோஸ் திறக்க...

உடலின் புலன்களெல்லாம் உணர்வு கொண்டது
உலகத்தை கண்டு
கண்களின் ஒவ்வொரு நரம்பும் உணர்வு கொண்டது
உலகத்தை கண்டு...

உலகம் உறங்க கதவு திறந்திருக்கும்
சில நேரம்
உலகமே உறங்கினாலும் விண்டோஸ் உறங்காது
என் நேரமும்

சரிவிகித உணவு அன்று!!!
தேவைக்கு உணவு இன்று!!!

தேவைகள் முடியாது,
தேவைகளே தேடலானதால்
விளைவுகளே மூடாத கதவுகள்...

நவீன் குமார் இரா

எழுதியவர் : நவீன் குமார் இரா (5-Sep-15, 1:34 pm)
பார்வை : 117

மேலே