சொர்க்கம் உங்களுக்கே
கண்கள் தானம்
சிறந்தது - இறந்த பின்;
ரத்தமின்றி, வலியின்றி,
முகத் தோற்ற விகாரமுமின்றி
தரலாம் கண் தானம்;
கண் தானம் செய்ய
தடையில்லை வயது;
(எய்ட்ஸ், வைரஸ் காமாலை,
வெறி நாய்க்கடி நோயால்
மரணமடைந்தோர் தவிர)
சிறு குழந்தை முதல்
எண்பது வயது முதியோர் வரை
ஆண் பெண் இருபாலோரும்
தரலாம் கண் தானம்;
கண்புரை, கிளாகோமா
அறுவை சிகிச்சை பெற்றவர்களும்
தரலாம் கண் தானம்;
பலனடைவோர் இருவர்
பார்ப்பது உங்கள் கண்கள்.
சொர்க்கம் உங்களுக்கே!