ஆசிரியர்கள்
ஏணிகள் நமக்கு
முக்கியம் இல்லை-இருந்தும்
அவைகள் இன்றி நமக்கு
உயர்நிலை இல்லை.
படிக்கட்டுகள் நம்மை
மேல் உயர்த்திவிட்டு
படி கற்களாகவே இருக்கும்
ஆனால் சந்தோஷமாக.
அறிவை தருவதற்கு
பல் லறிவு பெற்றார்கள்
நம் அறிவை எடுத்து கொண்டு
ஓடி நாம் வந்து விட்டோம்.
குழப்ப வாழ்க்கை நிலையிலும்,
விரும்பி பணி செய்திடுவர்,
உடல், மனதை வருத்தியும்,
உவகையை காட்டிடுடவர்.
நமக்கோ ஒன்றிரண்டு...
அவர்கட்கோ ஆயிரமாயிரம்....