ஏக்கமும் கனவும்

எழுத்து -
தன்னை ஒரு சொல்
வடிவமாகக் காண ஏக்கம் கொண்டது;

சொல் -
தன்னை ஒரு (புத்தகப்) பக்கத்தில்
இருப்பது போல கனவு கண்டது;

பக்கம் -
தன்னை ஒரு புத்தக வடிவில்
காண்போமா என ஏக்கம் கொண்டது;

புத்தகம் -
தன்னை யாவரும் வாசிப்பது போல,
சப்தமிட்டுப் பேசுவது போல கனவு கண்டது;

சொற்கள்
இப்பொழுது காகிதமாக இல்லை!
சொற்கள் ஒலியாக இருந்தன!.

இப்படியாக புத்தகத்தில் உள்ள
எழுத்துக்கள் மனிதர்களின் உதடுகளில்
வசித்து வந்தன!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Sep-15, 2:40 pm)
Tanglish : ekkamum kanavum
பார்வை : 228

மேலே