காலம்

காலம் ஒரு காட்டாற்று
வெள்ளம்போலே,
கட்டற்று ஓடிச் செல்லும்.

நல்லது, தீயது,
ஏதுமறியாது,
அனைத்தையும் புரட்டி,
கொண்டு போகும்.

நின்று பார்க்க
நேரமின்றி,
சீறிப் பாய்ந்து
முன்னேறும்.

ஆரவாரம், அமைதி
இரண்டிலும்
அச்சம் காட்டும்.

மரணம் என்னும்
கடல் கலக்கும்.
அதுவரையில்
வெள்ளமே வெல்லும்.

எழுதியவர் : செந்ஜென (5-Sep-15, 1:33 pm)
Tanglish : kaalam
பார்வை : 75

மேலே