பிச்சு எறிஞ்சேன்

கலக பட நெஞ்சுல சரக்கு தீந்து போச்சு...

வசை தர இனி எந்த மூகாந்திரமும் இல்லனு நஞ்சு வடிஞ்சுருச்சு

சோக கூட்ட பிச்சு எறிஞ்சேன்

அதுல கட்டு கட்டா பயமிருக்கு,
கூட்டம் கூட்டமா பாவமிருக்கு..

சந்தன குச்சியால வீடொன்னு கட்டுன..

அதுல இடையில்லா வாடைக்கென்றும் பஞ்சமில்லே..

வாசலுள்ள வண்ண கோலமொன்னு பூத்திருச்சு..

நல்லதெல்லாம் வந்து வாச்சுருச்சு..

இப்படியெல்லாம்
சந்தோச தீனிய நிறைக்காத..நெஞ்சு கரிக்குதுன்னே..

நேச மிகுதியால கர்பணை கூத்து அத காதுல வாங்கல

உசுரோட கனவு.....
கானல் நீருன்னு திரும்பி போனாங்க நிறைய பேரு..

நெஞ்சு கேக்காம அத நெருங்கி போனேன்

ஆத்தாடி அதுல வான குவியல் தெரியுது....

எழுதியவர் : சிவசங்கர்.சி (5-Sep-15, 12:35 pm)
பார்வை : 214

மேலே