இன்றைய தினம்
எல்.கே.ஜி படிக்கும் மிடா பாப்பா சாக்லேட் வாங்கி கொண்டு நன்றி சொல்கிறாள்...
தெரியாமல் தள்ளி விட்ட தண்ணீருக்காய் அம்மாவிடம் வருத்தம் தெரிவிக்கிறாள்...
ஆபிஸ் செல்லும் அப்பாவிடம் மறக்காமல் ஹெல்மெட் எடுத்துக் கொடுக்கிறாள்...
தெருவில் விளையாடும் நாய்குட்டிக்கு பிஸ்கட் தந்து மகிழ்கிறாள்...
நிழற்குடையில் புகைக்கும் ஒருவரிடம் அன்பாக சிகரெட் வாங்கி கீழே எறிகிறாள்...
பேருந்தில் நிற்கும் பாட்டியை உட்கார வைத்து அழகு பார்க்கிறாள்....
சாலையோரம் உள்ள செடியிடம நீர் விட்டு அன்பாக உரையாடுகிறாள்...
இவ்வளவு அழகாய் அவளுக்குள் அவள் ஆசிரியர் வாழ்ந்து கொண்டுருக்கிறார் என்பதை நான் கூற வேண்டியதில்லை...
நீங்களாகவே உணர்ந்து இருப்பீர்கள் ஒரு மாணவனாக உங்கள் ஆசிரியர்களை....