என் மனம் கவர்ந்த ஆசான்

நான் செய்யும் செயல்களில்
பாராட்டுக்கள் கிடைக்கும் போது
என் நினைவிற்கு வருபவர் அவரே.....

ஒழுக்கம் முதல் கல்வி வரை
அனைத்தும் சரிவிகிதமாய்
கற்றுத் தந்தவர் அவரே.....

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விடுமுறை நாட்களிலும்
எங்கள் அழைப்பை ஏற்று பள்ளிக்கு வந்து
சந்தேகங்கங்களை நிவர்த்தி செய்தவர் அவரே.....

நான் கண்டு வியந்து இப்படித்தான் இருக்க வேண்டும்
என்ற எண்ணம் மனதுள் வந்த
என் முன்மாதிரி அவரே.....


என் பத்தாம் வகுப்பு ஆசிரியருக்கு-ஜெனிட்டா-கணித ஆசிரியர்)

எழுதியவர் : ஆசான் (5-Sep-15, 4:04 pm)
பார்வை : 257

மேலே