எப்படி மறப்பேன்

பள்ளிக்கு செல்ல
மறுத்து அழுத என்னை
பஞ்சு மிட்டாய் வாங்கி
கொடுத்து பக்குவமாய்
கூட்டி செல்வாள் அன்னை ...

சிறு பொழுது என்னுடன்
விளையாடி பல பொழுது
கஷ்டப்பட்டு பர்ர்த்து
பார்த்து வாங்கி கொடுத்து
வேலைக்கு செல்லும் தந்தை ..

பாட்டுக்கு இசை நடனம்
அமைத்து பாங்காக சொல்லி
கொடுத்து பக்குவமாய்
விளங்கும் வண்ணம்
புரிய வைத்த ஆசான்.....

பாரினில் பட்டம் பெற்று
பன்முக தன்மை கொண்ட
மனிதனாய் வலம் வர
நான் என்ன தவம் செய்தேனோ
எப்படி மறப்பேன் என் பெற்றோரை
மற்றும் ஆசானை ...

எழுதியவர் : கவியாருமுகம் (5-Sep-15, 5:24 pm)
Tanglish : yeppati marappen
பார்வை : 123

மேலே