மதுமிதா

மதுமிதா - ன்னு சில பெண் கொழந்தைங்களுக்குப் பேரு வைக்கறாங்களே அதுக்கு என்னடா அர்த்தம்? மதுன்னா மது(போதை தரும் பானம்). மிதா -ன்னா என்னடா?

மதுமிதா-ங்கறது பெண் கொழந்தைங்களுக்கு வைக்கிற வட மொழி (சமஸ்கிருத)ப் பேரு. அந்தப் பேரை இரண்டாப் பிரிச்சுப் படிக்கவோ எழுதவோ கூடாது. மதுமிதா-ன்னா 'தேன் நிறைந்த' 'இனிப்பான'ன்னு அர்த்தம். இதெல்லாம் உனக்கு எப்பிடி தெரியும். சமஸ்கிருதம் உனக்குத் தெரியுமா?

சடங்கள்ல மந்திரம் ஓதரவங்களே சமஸ்கிருத சுலோகங்கள தமிழ்லே அச்சடிக்கப்பட்ட புத்தகத்திலிருப்பத மனப்பாடம் பண்ணித் தான் சொல்லறாங்க.. அவுங்கள்ல பெரும்பாலோர்க்கு எந்த சுலோகத்தை எந்த சடங்கிற்குச் சொல்லணும்ங்கறது மட்டுந்தான் தெரியும். அவுங்க யாரும் சமஸ்கிருதம் படிச்சவங்க இல்ல. கர்நாடகாவில் பெங்களூரிலிருந்து 300 கி. மீ தொலைவில் உள்ள மட்டூர் மற்றும் ஹொசஹள்ளி என்ற இரு சிற்றூர்களில் வசிக்கும் சுமார் 5000 பேர் மட்டும் சமஸ்கிருதத்திலே பேசறாங்க. செம்மொழியா இருந்தாலும் சமஸ்கிருதம் சடங்கு மொழியாகவும் வகுப்பறை மொழியாகவந்தான் இருக்குது. பெரும்பாலான மக்களால் ( ஆறு கோடி ம்க்களக்கு அதிகமாக) இந்தியாவில் பேசப்படும் ஒரே செம்மொழி நம்ம தமிழ். தமிழ் மொழி தோன்றிய காலத்தை இன்னும் கண்டறிய முடியல. பேருங்களுக்கான அர்த்தத்தை நான் விக்கிபீடியாவிலே தான் பாக்கறேன்.

எழுதியவர் : மலர் (5-Sep-15, 9:09 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 133

மேலே