ஆசிரியர்

பல தலைமுறைகளை
தத்தெடுத்து,
வாழ்க்கையெனும் நிலையாமை
நதியில் நீந்த
தத்துவப் பயிற்சி
தரும் வித்தைக்காரர்.
சிலர்
மரபின் சாரம்
மட்டுஞ் சொல்லி,
மாணக்கரை மட்டுப்படுத்துவர்.
சிலர்
புதுமையின் விரியம்
மட்டுஞ் சொல்லி,
மாணக்கரை பூப்பெய்த வைப்பர்.
வெகு சிலர்
மரபின் சாரமும்
புதுமையின் விரியமும்
சேர்த்துச் சொல்லி,
மாணக்கரை பகுத்தறிவால் ஆள வைப்பர்.
மூன்றாவது அணிக்காய்
தவமிருக்கும் தமிழ்நாட்டைப்
போல்,
மூன்றாமவர் இங்கே
பல்கிப் பெருக
அவா கொள்கிறேன்.