கவிதைகள்

எது குறித்தும்,
கவிதை எழுதுதல்-மிகவும்
இயல்பாகிப் போனது....

காதலோ...நட்போ...
ஆன்மீகமோ....வாழ்க்கையோ...

எதில் நாம் வென்றோம்,
என்பதில் பதில்-எண்ணம்
கேலியாகிப் போனது....

இருந்தும் இன்னும் என்ன...
உள்ளமும் வாழ்வும் உண்டு....
அத்தனையும் கொண்டு வா-கவிதையில்,
அத்தனையும் வென்று விடு-வாழ்க்கையில்.

எனில்....
கவிதை எழுதுதல் இன்று,
தாய்க்கு மழலைப் போலே -மிகவும்
பிடித்தமாகிப் போனது....

எழுதும் கவிஞர்க்கெல்லாம்......
நானும் கவிஞன் தான்.

எழுதியவர் : செந்ஜென் (6-Sep-15, 1:05 am)
Tanglish : kavidaigal
பார்வை : 151

மேலே