ஐந்தாம் தொகுப்பு-

நூன்முகம் நுண்மாண் நுழைபுலத் தாலே நுழைந்தெழுத்தி
னான்முகம் நீட்டிடு மைந்தால் மகிழுந் தமிழ்அகமே
நூன்முகம் நுண்மாண் நுழைபுலத் தாலே நுழைந்தெழுத்தின்
நான்முகம் நீட்டிடு மைந்தால் மகிழுந் தமிழகமே

இது பாடக மடக்கு

பாடு அகம் மடக்கும்
பாடக மடக்கு
இது அடிக்கு 16 எழுத்துக்கள் வீதம் இரண்டு அடிகளில் 32 எழுத்துக்கள் வருமாறு பாடப்பட்டு
அதே இரண்டடி மடக்காக அடுத்துவரும் அடியிலும் வரும்படி பாடப்பட்ட கட்டளை கலித்துறை

பொருள்;
முகநூன்முகம் –முக நூல் வழியாக
நுண்மாண் –நுட்பமான சிறந்த
நுழைபுலத் தாலே- வலைதளத் தாலே
நுழைந்தெழுத்தினான்-உள் நுழைந்து எழுத்து தளத்தில்
முகம் நீட்டிடு மைந்தால்-முகம் அல்லது திறன் காட்டிடும் மக்களால்
இதில் மைந்தால் என்பது பெண்பாற் கவிஞர்களையும் குறிக்கும் மக்களால் என்று பொருள் கொள்க
அதாவது
–முக நூல் வழியாக –நுட்பமான சிறந்த வலைதளத் தாலேஉள் நுழைந்து எழுத்து தளத்தில்
திறன் காட்டிடும் மக்களால் மகிழும் தமிழ் (அகமே) மனமே என்பதாம்
இது முதல் இரண்டடியின் பொருள்
இதையே அடுத்துவரும் மடக்கான அதே அடியின் பொருள் பின் வருமாறு காணலாம்

நூன்முகம்- எழுதிய நூலின்
நுண்மாண் நுழைபுலத் தாலே –தேர்ந்த நுட்பமான புலமையினாலே
நுழைந்தெழுத்தில்- எழுத்தில் நுழைந்து
நான் முகம் நீட்டிடும் -பிரம்மன் (படைப்பவன் படைப்பாம்)
( இது சமய நம்பிக்கை இல்லாத நண்பர்களுக்கு இப்படியும் பொருள் கொள்க;-
நான்முகம் நீட்டிடும்- நான்(கு) முகம் அதாவது நான்கு திசையிலும் திறன் விரித்திடும்(நீட்டிடும்)
நான்கு முகம் செய்தி போல-(வடக்கு-N கிழக்கு-Eமேற்கு-W தெற்கு-S இது தானே-NEWS) நாள்+முகம்=நாளும் முகம் காட்டும் என்றும் பொருள் கொள்ளலாம்)

ஐந்தால்-ஐந்தாம் தொகுப்பால்
மகிழுந் தமிழகமே-மகிழும் தமிழ் நாடே

தேர்ந்த நுட்பமான புலமையினாலே எழுத்தில் நுழைந்து படைத்தவர் படைப்பாம் ஐந்தாம் தொகுப்பால்
மகிழும் தமிழ் நாடே
மகிழும் தமிழ் அகனே என்றும் பொருள் கொள்ளலாம்
தொகுத்தவரையும் சேர்த்தே போற்றுவோம்,,..
இதில் முதல் 2 அடிகள் எழுத்துத்தள எழுத்தாளர்கள் எழுத்தால் தமிழ் மனம் மகிழ்வதைக்கூறி
அடுத்த 2 அடிகளில் ஐந்தாம் தொகுப்பு படைப்பாளிகளையும் ஐந்தாம் தொகுப்பைத் தொகுத்த
அகன் ஐயாவினையும் அதனால் நம் தமிழகம் அடையவிருக்கும் மகிழ்வையும் பாடியுள்ளேன்.
இதனை ஐந்தாம் தொகுப்பு படைப்பாளிகளுக்கும்
தொகுக்கும் அகன் ஐயா அவர்களுக்கும் அன்பாக படைக்கிறேன்…
இதன் தொடர்ச்சி ஏக பாத மாக

எழுதியவர் : சு.ஐயப்பன் (6-Sep-15, 10:11 am)
பார்வை : 69

மேலே