TREE POLICY

தரக் கொள்கை போல மரக் கொள்கை வகுப்போம்
மரங்களை வெட்டுவதைத் தடுப்போம்
மரங்களுடன் உறவாடுவோம்
மரங்களுடன் உரையாடுவோம்
மரங்களிடம் அன்பு காட்டுவோம்
மரங்களுக்கு வழி விட்டு சாலைகள் அமைப்போம்

நிழலைத் தரும்
அழகைத் தரும்
பழங்களைத் தரும்
மருந்தைத் தரும்
காற்றை சுத்தம் செய்யும்
பறவைகள் வாழவும் இடம் கொடுக்கும்

மரங்களுக்கு நாம் நிரந்தர வாடிக்கையாளர்கள்
மரங்களுக்கு நாம் மதிப்பு கொடுப்போம்
மரங்கள் அழிந்தால் நாம் அழிவது உறுதி *****

திருமண விழா
குழந்தை பிறப்பு
காதணி விழா
பிறந்த நாள்
திருமண நாள்
புதுமனை புகு விழா
கோயில் திருவிழா
ஊர் திருவிழா
இந்த இனிய நாட்களில் மரங்களை நட்டு வளர்போம்
தவறாமல் செய்வோம் நாம்

16-07-2015
P Murugesa Pandian

எழுதியவர் : P முருகேச பாண்டியன் (6-Sep-15, 7:48 am)
பார்வை : 133

மேலே