CHALLENGE TO HUMANITY

இரவு நேரம் …….அடர்ந்த காட்டுப் பகுதி
நேசனல் ஜாக்கிரபி சானல் ஒளிப் பதிவு காட்சி
மிக சிறியக் குட்டிக் குரங்கு ஒன்று
தாய்க் குரங்கைப் பிரிந்து, மரக்கிளையில் தவிக்க
சிறுத்தை ஒன்று அதன் அருகில் செல்ல
பயத்துடனே குட்டிக் குரங்கு தடுமாறி மேலே எற
சிறுத்தை அதைத் தடுத்து
தன் வாயினால் மெதுவாக கவ்விக் கொள்ள
குட்டிக் குரங்கு திகைத்து பதற,
சிறுத்தை கீழே இறங்கி
குட்டிக் குரங்கை தன் அருகில் படுக்க வைத்து
நாக்கால் தடவிக் கொடுக்க,
அங்கே ஒரு நேசம் உதிக்கிறது பாசத்துடன்
மனித நேயத்திற்க்கு ஒரு சவால் !

19-06-2015
P Murugesa Pandian

எழுதியவர் : P முருகேச பாண்டியன் (6-Sep-15, 7:41 am)
பார்வை : 84

மேலே