SONG ON HOSUR PARROT ZONE

மலைக்கு அருகில் சில மரங்கள் இருக்கு
அதில் பச்சைக் கிளிகள் வாழ்ந்து கொண்டும் இருக்கு
கிளிகளுக்கு உணவும் மரங்கள் கொடுத்து
கிளி ஓசையும் இனிமையாக இருக்கு (ஓசூர் மலைக்கு

இயற்கையாக இங்கு இருக்கு கிளிகள்
இவற்றைப் பாதுகாக்கத் திட்டம் நமக்கு தேவை
இங்கே அமைதி காக்க வேண்டியதை செய்வோம்
கிளிகள் பயப்படாமல் வாழ வகை அமைப்போம் (மலைக்கு

கிளிகள் பெருகி வாழ அதிக மரங்கள் தேவை
இங்கே மலையைச் சுற்றி நிறைய இடம் இருக்கு
அங்கே சரியான மரங்களை வளர்ப்போம்
அவற்றை கிளிகளுக்குப் பரிசாகக் கொடுப்போம் (மலைக்கு

மலையைச் சுற்றிப் பூங்காக்கள் வேண்டும்
அங்கு பூத்துக் குலுங்கும் மலர்ச் செடிகள் இருக்கும்
பூப்பூக்கும் மரங்களும் அழகைச் சேர்க்கும்
சுற்றிப் செல்ல நடைபாதை நன்றாக இருக்கும் (மலைக்கு

அதிகமாக கிளிகளும், பறவைகளும் கூடி வாழ
வண்ணத்துப் பூச்சிகள் தாவி பறக்கும்
கூட்டமாக மக்களும் கிரிவலம் செல்ல
சுற்றுலா இடமாக உருவாகுமே ! (மலைக்கு

08-07-2015
P Murugesa Pandian

எழுதியவர் : P முருகேச பாண்டியன் (6-Sep-15, 7:37 am)
பார்வை : 56

மேலே