மரங்கள்

வளர்ந்து விட்டமரங்கள்
சொல்லும்
தான் வளர்ந்த விதம்
மனிதன் வளர்த்த மரங்களுக்கு
மனிதனே சாட்சி
தானே வளரும் மரங்களுக்கு
பூமியே சாட்சி

தானாக வளர்ந்த மரங்கள்
தன் இஸ்டம் போல் படர்ந்து
பெரும் கிளைகள் உருவாகி
நிழல் தரும் மரமாகி
பறவைகள் வாழ்ந்திட
பக்குவமாய் கூடு கட்ட
இந்த பாரிய மரங்களே
உயரிய குணம் கொண்டவை
தானாக வளர்ந்தாலும்
தன் பெருமை குன்றாது அது காட்டு மரம்

மனிதன் வளர்த்த மரம்
சும்மா செல்லப் பிள்ளை போல்
ஒயிலாக வளர்ந்து நிற்கும்
அதன் தேவை என்னவோ
மனிதன் தன் பிள்ளையைப் போல் நினைத்து
நீரூற்றி பசளை இட்டு வேலி கட்டி
பொத்திப் பொத்தி வளர்த்திடுவான்
அந்த மரம் மனிதனின் செல்லப் பிள்ளை
தானாக வளர்ந்திட்ட மரத்திற்கும்
மனிதன் வளர்த்திட்ட மரத்திற்கும்
நிறைய வித்தியாசம் உண்டு
அது காட்டு மரம் இது வீட்டு மரம்

மரங்கள் இல்லாத ஊரும் நாடும் பாலைவனமே
மரங்கள் கொண்ட காடும் வீடும் சோலை வனமே

எழுதியவர் : பாத்திமா மலர் (5-Sep-15, 11:19 pm)
Tanglish : marangkal
பார்வை : 158

மேலே