இவனும் ஒரு சிவனோ

2011 ல் புதுக் கவிதை

கங்கையைத் தலையிலே
அணிந்திருந்த சிவனைப் போல,

நீர்வீழ்ச்சியைக் கோப்பையிலே
பிடிக்கும் சிறுவன்;

இவனும் ஒரு சிவனோ!

போட்டோ கிராபியிலே
இதுவும் ஒரு விந்தை!

2015 ல் மரபுக் கவிதை

இவனும் ஒரு சிவனோ! - நிலைமண்டில ஆசிரியப்பா

கங்கையைத் தலையிலே அணிந்த சிவனோ,
பொங்கும் அருவியைக் கோப்பை யில்பிடிக்கும்
சிறுவ னிவனும் சிவனே தானோ!
பெறும்புகைப் படக்கலை யிதுவுமோர் விந்தையோ!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Sep-15, 8:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 98

மேலே