மழையும் மனமும்

இலைகளில் அசைவில்லை
காற்றுவீசும் நொடிகளுக்கேங்கி
நிசப்தமாய் நிமிடங்கள் கரைய

சிறு மின்னலின் வெளிச்சத்தினூடே
இடியோடு பெருமழையும்
சுழல்காற்றும் எங்கும் சூழ

மனம் சபித்தது
வந்த காற்றை
திரும்பி செல்ல...!
--------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (5-Sep-15, 8:28 pm)
Tanglish : mazhaiyum manamum
பார்வை : 1384

மேலே