நம்பிக்கையின் வெற்றி
இரை எங்கு இருந்தாலென்ன
இறக்கையாய் உந்துசக்தி உன்னோடு இருக்கையில்!
இலக்கு தொலைவில் இருந்தாலென்ன
ஈட்டியாய் பாயும் உன் நம்பிக்கை இருக்கையில்!
போராட்டம் எத்தனை வந்தாலென்ன,
எரிமலையாய் துணிவு இருக்கையில்!
சவால்கள் எத்தனை வந்தாலென்ன,
சாதிக்க நீ வெறியுடன் துடிக்கையில்!
பயணம் எத்தனை தூரம் இருப்பின் என்ன,
சூறாவளியாய் உன் வேகம் இருக்கையில்!
பிரச்சினைகள் எத்தனை இருப்பின் என்ன,
சுட்டெரிக்கும் விவேகம் உன் வசம் இருக்கையில்!
சோகம் பல சூழ்ந்து வந்தாலென்ன
அக்கினி பிழம்பாய் உன் சக்தி இருக்கையில்!
சோர்வடையச் செய்யும் சூழ்நிலைகள் வந்தாலென்ன
சுறுசுறுப்புடன் கூடிய உன் விடாமுயற்சி இருக்கையில்!
முட்டுக்கட்டை எத்தனை இருந்தாலென்ன – அவைகளை
மூட்டைக்கட்டும் கடிண உழைப்பு உன்னிடம் இருக்கையில்!
முறுக்கேற்றி பல எதிர்ப்புகள் வந்தாலென்ன
வெற்றி பெரும் பேராற்றல் உன்னிடம் இருக்கையில்!
ஆயிரம் கைகள் மறைதால்லென்ன
ஆதவனை மறைக்க முடியுமா ?
ஆயிரம் செம்மறிகள் சேரினும்,
சிங்கத்தை எதிர்க்க இயலுமா?
நண்பா, நீ சிங்கம், ஆதலால்
கர்ஜித்து, வீறுகொண்டு எழுந்து வா
உலகம் உன் காலடியில்!!!!

