துரோகம்

தோல்வி தாங்கும் இதயம் எனது - உன்
துரோகம் தங்காது...

சோகம் தாங்கும் நெஞ்சம் - உந்தன்
வஞ்சம் தங்காது...

மரணம் எதிரில் வந்தால் கூட
மனது கலங்காது
மனதில் உன்னை நினைத்ததினால்
விழிகள் கலங்குது
இரவில் உறங்காது...

கொஞ்சி பேசி எந்தன் நெஞ்சில்,
ஆசை வளர்த்தாயே,
கொஞ்சம் கொஞ்சம் கொல்லும் நஞ்சாய்
மோசம் செய்தாயே...

விழிகள் பேசிய வார்த்தைகள் பொய்யோ,
விரல்கள் வருடிய பொழுதுகள் பொய்யோ,
பொய்யென்று போனாலும் பொறுத்திடும் நெஞ்சம்
உண்மைதான் உருத்துதடி
உயிரை தினம் அருக்குதடி....

எழுதியவர் : சுரேஷ்க்ருஷ்ண (6-Sep-15, 3:07 pm)
Tanglish : throgam
பார்வை : 354

மேலே