இயற்கை

உள்ளுக்குள் தோன்றுகின்ற வலியை(யே)
மெல்லநீயும் கேட்டு கொள்ளு(கொல்லு) நதியே..
கூவும் குயிலை தாவும் முகிலை இதயம் முதல்முறை ரசிக்கின்றதே..
இருவிழிகளும் இயற்கையை புசிக்கின்றதே...
மலையிடம் விளையாடும் மேகம் ..
அதைகண்டு ஓடும் என் மனசோகம்.
புல் மடியில் உறங்கிய பனித்துளி,
கதிரவன் காதலில் காணாமல் போனதே..
பூக்கள் இதழில் இதழ் வைத்து,
பாக்கள் பாடதோனுதே..
தொட்டா சிணுங்கி இலைகளை தொட்டு,சுருங்கபார்க்கிறேன்.
சிட்டாபறந்து காடெல்லாம் கண்டு களிக்க போகிறேன்.
கார்மேகதூறலில் பூமி நனைந்தது.
சேர்ந்த காதலில் புல்வெளிகுழந்தை பிறந்தது.
தென்றல் காற்று தேகம் தழுவ,
கன்னல் இளமை மெல்ல நழுவ,
போதை இல்லாமல் பேதை மயங்குறேன்.
பாதை இல்லாமல் பயணம் தொடங்குறேன்.
மரத்தை துளைத்து கூடுகட்டி கொஞ்சி விளையாடும் சிறு பறவை.
வட்டிக்கு கொடுத்தபணம் வசூல் பண்ணவே சுட்டிக் குழந்தையாய் சுற்றிடுதே வண்டினமே...
கொட்டும் அருவிக்கு ஏன் இந்த கோபம்?
எட்டாமல் இருப்பது யார் இட்ட சாபம்.
இயற்கையோடு என் வாழ்க்கை பயணத்தை தொடங்க போகிறேன்.
இருக்கும் வரையிலே ரசித்து சிரித்துநான் வளர்பிறையாய் ஆகிறேன்...
கு.தமயந்தி.

எழுதியவர் : கு.தமயந்தி (6-Sep-15, 3:45 pm)
Tanglish : iyarkai
பார்வை : 338

மேலே