சிநேகிதி
![](https://eluthu.com/images/loading.gif)
எனக்கு ஒரு தோழி இருந்தாள்
என்னை எனக்கே அறிமுகம் செய்தாள்!..
அவ்வளவாக பேசமாட்டாள்
அர்த்தமாய் பேசுவாள்!...
இருள் மூழ்கி உயிர் குடிக்கும்
தருணத்தில்
வித்தியாசமான விடியலாய் வந்தாள்!...
உணர்வுகள் உறைந்து கிடக்கையில்
உள்ளிருந்து உருவகப்படுத்தினாள்!...
எனக்கென யாரென்று நினைக்கும் முன்
எனக்காக வந்தாள்!...
துன்பம் வந்து தீண்டுகையில்
தலை சாய்க்க தோள் கொடுத்தாள்!...
பின் தலை நிமிரவும் சொல்லிகொடுத்தாள்!...
சிலையென கிடந்த சிரிப்புகளுக்கு
சிறகுகள் தந்தாள்!...
அவள் கைகள் பற்றி நடக்கையில்
வாழ்கையின் நம்பிக்கை எதுவென கண்டேன்!...
ஓர்மடி பிறக்காவிட்டாலும்
ஒன்றாய் இணைந்திருந்தோம்!...
அவளது நினைவுகளால்
உதட்டில் புன்னகையுடன்
விழியில் ஒருதுளி கண்ணீரும்
சேர்ந்தே நிற்கிறது!...
நீ என்னுடன் இருந்தால்
எங்கும் வெல்வேன்
எதையும் வெல்வேன்
உன்னால் தோழி!....