பேஜார்

" பேஜார் "

உண்மை சொல்ல வந்தவனோ
உளறிக் கொட்டித் தீர்க்கிறான்
நன்மை செய்ய வந்தவனோ
பதறி அடிச்சி ஓடுறான்

பெண்மை சொல்ல வந்தவளோ
வேசியாகத் திரிகிறாள்
ஆண்மை செய்ய வந்தவனோ
தூசியாகப் பறக்கிறான்

உண்மை நன்மை பெண்மை ஆண்மை
பஜாரில் பேரம் பேசுது
உண்மை நன்மை பெண்மை ஆண்மை
பேஜாராப் போச்சுது

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (6-Sep-15, 7:53 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 43

மேலே