ஆணென்ன, பெண்ணென்ன
மகனை ஈந்தோர்
பட்ட கஷ்டமறிந்த
மானிடர் அறிவார்
மகளே போதும் என்பார்
மருமகனும் மகனாய்
மாறிடும் மாட்சிமை
மனைமாட்சி கிட்டிட
மாமகிழ் அடைந்திடுவார்.
வாய்கிழிய பேசிடும்
வாழ்வினில் மனிதனுக்கு
வாய்த்திடும் பெரும் பேர்
யாரறிவார்?
மனம்போல் வாழ்வெனும்
மந்திரமறிந்த மனிதன் அறிவான்
மகனும் மகளும் ஒன்றே மாறாது
ஈன்ற பாசம், ஈடாய் எதிர்பார்த்தல்
லாபமாகுமா, நஷ்டமாகுமா
எந்திர வாழ்வில் தந்திர வேகம்
மந்திரத்தில் மாங்காய் விழலாம்
மனதை வெல்ல மனமே அறியும்
முள்ளை முள்ளால் தைத்திடும்
முறையும் அறிந்த மானிடனே
முனைவர் எவருண்டுன் மூர்க்க சிந்தனைக்கு,
மகள் மருமகன், மகன் மருமகள் உற்றம் சுற்றம்
மாந்தரில் அனுபவமே தெளிவு அனைத்துமே உறவு.