மின்சார சிக்கனம்

அரசாங்கம் எரி பொருளின் விலையை அதிகரித்துவிட்டதென்று குற்றம் சாட்டும் பொதுமக்கள், தாங்கள் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை புரிந்து கொண்டு சிறிதளவேனும் அரசாங்கத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குகிறார்களா என்று சற்று சிந்தித்து பார்த்தல் அவசியமாகும்.

மின்சாரக்கட்டணம் அதிகரிப்பைப் பற்றி எதிர்ப்பை தெரிவிக்கும் பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்க வேண்டுமென்று இலங்கை மின்சார சபை விடுக்கும் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கிறார்களா என்று நாம் ஆய் வொன்றை நடத்தினால், எங்கள் நாட்டின் மின்சாரப் பாவனையாளர்களில் 3 சதவீதத்தினர் மாத்திரமே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தியிருக்கி றார்கள் என்ற உண்மை இதனால் புலனாகிறது.

இவர்களும் தேசப்பற்றுடன் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினார்கள் என்று கூறுவதற்கில்லை. தங்கள் வருமானத்திற்கு ஈடுசெய்யக்கூடிய வகையில் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். இல்லையானால் தங்களின் ஏனைய அத்தியாவசியத் தேவைகளை ஈடுசெய்வதற்கு கடன்வாங்க வேண்டியிருக் கும் என்ற அச்சத்திலேயே இவர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத் துகிறார்கள்.

மின்சாரப் பாவனையாளர்களில் 97 சதவீதமானோர் மின்சாரத்தை அநாவசிய மாக பொறுப்பற்ற முறையில் விரயம் செய்கிறார்கள். அரசாங்க காரியால யங்களில் பகல் பொழுதிலும் திரும்பிய இடமெல்லாம் மின்விளக்குகள் எரி க்கப்படுகின்றன. அது போன்று, மின்விசிறிகளும் அந்த அறையில் உத்தி யோகத்தர்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தன்பாட்டில் சுழன்று கொண்டே இருக்கும்.

வீதி விளக்குகள் இரவு நேரத்தில் மக்களுக்கு ஆபத்தின்றி நடமாடுவதற்கா கவே பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த வீதி விளக்குகள் சூரிய உதயத் தின் பின்னரும் தொடர்ந்தும் எரிந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை எந்தவொரு அரசாங்க உத்தியோகத்தரும் கவனிப்பதே இல்லை.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் குறிப்பாக கொழும்பு மாநக ரத்தில் வீதி விளக்குகள் எரிவாயுவின் மூலமே எரிக்கப்பட்டன. அந்தி சாயும் நேரத்தில் ஒரு சிப்பந்தி சைக்கிளில் வந்து ஒரு நெருப்புக்குச்சியை பற்றவைத்து, அந்த விளக்கை ஏற்றிவிட்டு செல்வார். மறுநாள் காலையில் வந்து அதனை அணைத்துவிடுவார். அது போன்று மின்சார விளக்குகள் அறிமுகம் செய்யப்பட்ட பின்னரும் மாலையில் அவற்றை செயற்படுத்தி விட்டு அதிகாலையில் வந்து சிப்பந்திகள் அணைத்து விடுவார்கள்.

வீடுகளில் படுக்கையறைகளில் கூட 24 மணிநேரமும் எவரும் இல்லாத போது அந்த வீட்டிலுள்ள மின்விசிறிகள் செயற்படுகின்றன. மின்சாரத்தை சேமிப்ப தற்காக நாள் ஒன்றுக்கு மூன்று மணித்தியாலங்களாவது குளிர்சாதனப் பெட் டிகளை செயல் இழக்கச் செய்யுங்கள் என்று மின்சார சபை விடுத்த கோரிக்கை எத்தனை வீடுகளில் கடைப்பிடிக்கப்படுகின்றன.

மக்கள் விலையேற்றத்தை பற்றி பேசுவதற்கு பதில் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த பழகிக் கொண்டால் வீண் பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ள முடியும்.

எழுதியவர் : (8-Sep-15, 12:22 pm)
சேர்த்தது : கீத்ஸ்
Tanglish : minsara chikkanam
பார்வை : 8653

சிறந்த கட்டுரைகள்

மேலே