தனிமனித ஒழுக்கம் அவசியம்… சுவாமி விவேகானந்தர்
ஒவ்வொரு மனிதனும் நல்லவனாக வாழ சில விஷயங்களில் அக்கறை கொண்டவனாக இருக்க வேண்டும். நன்மை தரக்கூடிய விஷயங்களில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.
பொறாமை, சந்தேகம் போன்றவற்றை முற் றிலும் ஒழிக்க வேண்டும். நல்லவர்களாக இருக்கவும், நன்மையைச் செய்யவும் முயற் சி செய்ய வேண்டும்.
ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளை ச் செய்ய வேண்டும். இவையெல்லாம் மனிதனை மேம்படுத்தும் விஷயங்களாகும்.
கற்பு நெறியிலிருந்து ஆண்களும், பெண்களும் தவறுவதுதான் ஒரு நாட்டின் அழிவி ற்கு முதல் அறிகுறியாகும். சமுதாயத்தில் கற்புநெறி தவறுதல் என்னும் கேடு நுழைந்து விட்டால் அச்சமு தாயத்திற்கு முடிவுக் காலம் நெருங்கி விட்டதென்று பொருள்.
இதை யாராலும் தடுக்க முடியாது. அதனால், தனி மனித ஒழுக் கத்தின் அடிப்படையில் தான் சமுதாயத்தின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது என்பதைச் சொல்லத்தேவையில்லை.
ஒரு செயலின் பயனில் கருத்தைச் செலுத்தும் அளவிற்கு, அந்த செயலை ச் செய்யும் முறையிலும் கருத்தைச் செலுத்த வேண்டும். செல்ல வேண்டி ய பாதையில் கவனம் வைத்தால் அடைய வேண்டிய குறிக்கோளை அடைவதற் கான வெற்றி ரகசியங்கள் ஒவ் வொன்றாக திறக்க ஆரம்பிக்கும். என்வாழ்வில் கற்றுக்கொண்ட பாடங்களுள் மிகப் பெரியதாக இதைக் கருதுகிறேன்.