குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு என்பது,
இயல்பில் தைரியமாக இருக்கும் குழந்தைக்கு
பலவித பயங்களை அறிமுகப்படுத்தி,
பின் தைரியமாக இருக்கச்சொல்லி
பாடம் எடுப்பது.
வளர்ந்தபின் குறும்புகளை ரசிப்பது
ஆனந்த யாழை மீட்ட வைத்து
அருகில் நின்று
மனதுக்குள்
மந்தகாச மழையில் நனைவது.
வளர்த்த கடா வரம்பு மீறும்போது
விழிநீர் சிந்தி வெறிக்க பார்ப்பது
மஞ்சுவிரட்டில் தோற்று போவதுபோல.
பயம் தரும் பாடம் பலன் தரும்
இசையெனும் மழையில் இதயம் நனையும்
பலப்பரிட்சையில் தோல்வி, முடிவில் வெற்றி தரும்.