வெறும் பழமொழி மட்டுமன்று

உடல்நிலைதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை.
அது பிசகினால் மனிதனைக் கந்தல் துணியாக்கிவிடுகிறது.

யாருக்கு எப்பொழுது எந்த நோய் வருகிறது என்பதையெல்லாம் கணிக்கவே முடிவதில்லை.

ஒரேயொரு கீறல்தான் விழுந்தது. உடலில் சர்க்கரை, ரத்த அழுத்தம் என்று எதுவுமில்லை ஆனால் ஒரே மாதத்தில் கால் வீங்கி எதுவுமே செய்ய முடியாது என்கிற நிலைமைக்கு வந்துவிட்டதாகச் சொல்கிறவர்களை பார்க்க முடிகிறது.

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வரை நன்றாகத்தான் இருந்தார் என்றும் இப்பொழுது படுக்கையில் சாய்ந்துவிட்டதாகச் சொல்பவர்களையும் எதிர்கொள்ள நேர்கிறது.

இவையெல்லாம் ஏதோவொருவிதத்தில் நம்மை எச்சரித்துக் கொண்டேயிருக்கின்றன.

சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்பது வெறும் பழமொழி மட்டுமன்று.

எழுதியவர் : செல்வமணி (10-Sep-15, 1:00 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 126

மேலே