முகமூடி

உனக்கென ஓர் முகமூடி
இவர்க்கென ஓர் முகமூடி
அவர்க்கென ஓர் முகமூடி
பிறர்க்கென ஓர் முகமூடி
ஒவ்வொருவருக்கும் ஓர் தனி முகமூடி!

ஐயகோ! என் உண்மை முகம்
மறந்து போச்சே...
மறைந்தே போச்சே!

பிறர்க்கென சுயம் மறைத்து
புதைகுழியில் நான் வாழ்கின்றேன்...
என் இதயம் கிழித்து அழுகின்றேன்.

கூட்டுப் புழுவினின்று புறப்படும்
வண்ணத்துப் பூச்சியாய்...
அரிதாரம் நீக்கி,
வேடமெலாம் கலைந்து,
சிறகடித்துப் பறக்க ஆசை.

கலப்பில்லா என் முகம் காண்.
நினக்கும் பிடிக்கும்.
மெது மெதுவாய்...
மெது மெதுவாய்...

எழுதியவர் : பேட்ரிக் கோயில்ராஜ் (10-Sep-15, 6:48 am)
Tanglish : mugamoodi
பார்வை : 186

மேலே