வெற்றியை தேடி

வெற்றியை அடையும் வழியை கூறு என்று
ஞாயிரிடம் நாடினேன் - நான்
இன்று விடுமுறை விடை தெரியாது என்றது
திங்களிடம் திண்டாடினேன் - நீ
தன்னம்பிக்கை திறமையோடிரு என்றது
செவ்வாயிடம் சென்றேன் - நீ
செல்லும் வழி இதுதான் செல் என்றது
புதனிடம் புலம்பினேன் - நீ
புத்துணர்ச்சியோடு புறப்படு என்றது
வியாழனிடம் வினாவினேன் - நீ
விடாமுயற்சியோடு விரைந்து செல் என்றது
வெள்ளியிடம் வேண்டினேன் - நீ
வெற்றியை அடைந்தாய் என்றது
சனியிடம் சந்தோசப்பட்டேன் - நீ
சாதித்து விட்டாயே என்றது
-கவிசதிஷ் செல்-9965909897

எழுதியவர் : கவிசதிஷ் (10-Sep-15, 7:24 pm)
சேர்த்தது : சதிஷ்குமார்
Tanglish : vetriyai thedi
பார்வை : 134

மேலே