உனக்காக இது உனக்காக__________________நிஷா

எத்தனை நண்பர்கள்
எனக்குத் தெரியுமா...
ஆனால்
எதுவுமே என் உயிரில் கலக்கவில்லை
உன் அன்பை போல....


எத்தனை ஈரவிழிகள்
எனக்காக தெரியுமா....
ஆனால்
எதுவுமே என்னிதயம் தொடவில்லை
உன் பிரிவைப் போல.....

இந்த பிரிவு
ஏதோ சொல்கிறது
எனக்குள்ளே....

இநத அதிகாலை
வேளையிலே
நீயோ...
தூங்கிக் கொண்டிருக்கலாம்....

ஆனால் நானோ....
துக்கத்தில்
தூக்கத்தை
தொலைத்துக் கொண்டிருக்கிறேன்....

இந்த பாசம் நீ
கொடுத்த
பொக்கிஷம்.....


என் மனதை நீ உணர
முடிந்தது
அதிசயமே....
எனக்காக உன்னை நீ
மாற்றிக்கொண்டதில்
என் மதிப்பிற்குரிய
முதல் மனிதன் ஆனாய்.......


ஆனால்
ஒன்று மட்டும் நீ
அறிய வாய்ப்பில்லை....
உன்மீது நான் கொண்ட
பாசம் எப்படிபட்டதென்று....

காதலும் இல்லை
காமமும் இல்லை
எப்படி சாத்தியம் என
எத்தனை முறை
யோசித்திருப்பேன் தெரியுமா.....

தீண்டுமந்த காற்றுகூட
உன் பெயரை சொல்வதாக
தெரிகிறது எனக்கு....
திரும்பி பார்க்கும்
இடமெல்லாம்
உனைக்காண முடியும்
அதிசயம் எனக்குள்ளே.......


முள்ளிடுக்கில் ஒரு நிமிடம்
மூச்சுவிடப் பார்க்கிறேன்...
நானோ
மொத்தமாய் என்னுள்ளே
மூச்சடைத்து நிற்கிறேன்....

மதி அறியா வயதினிலே
கள்ளங்கபடமின்றி விளையாடுவோமே
அப்படித்தான் உன் அன்பையும்
பொக்கிஷமாய் என்
மனம் எனும் அன்புச்சிறைக்குள்
பத்திரப்படுத்துகிறேன்....

கடைசியாத...
இத்தனை நாள் நீ
தந்த நினைவுகள்
என்னுடனே.....


நீங்காமல் என்னோடு
வாழும்...
இது போதும்
எனக்கு.....

எழுதியவர் : நிஷா (11-Sep-15, 11:21 am)
பார்வை : 67

மேலே